திரௌபதி அம்மன் கோயில்களில் போத்தராஜா சிலை கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். இதை பற்றி பெங்களூரு கரகம் பற்றிய எனது பதிவிலும் கூறி இருக்கிறேன். போர் மன்னன் எனப்படும் இந்த போத்த ராஜாவுக்கு என்றே தனி கோயில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் என்ற ஊரில் அமைந்துள்ளது.
அவலூர் பேட்டையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் இந்த ஊர் அமைந்துள்ளது. காலம் சென்ற புலவர் திரு. மங்கலம் மன்னன் அவர்களும் பத்திரிக்கையாளர் திரு. தமிழ் செல்வன் அவர்களும் இந்த ஊரை சேர்ந்தவர்கள் தான்.
போர் மன்னன் கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான போர்மன்னனின் சிற்பம் வைக்கப்பட்டிருக்கும். ஆண்டு தோறும் இந்த சிலையே தேராக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விழா நடத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று.
வன்னியர் வரலாறு கூறும் கோயில்களில் மங்கலம் போர்மன்னன் கோயிலும் முக்கிய இடம்பெறுகிறது. இந்த ஊரில் போர்மன்னன் கோயிலுக்கு அருகிலேயே வன்னியர்களின் குல தெய்வமான சொர்ண காமாட்சி அம்மனுக்கும் கோயில் உள்ளது. இதோ அந்த படங்கள் :