Wednesday, 4 July 2012

என் ஆந்திர பயணம்

தமிழ்நாட்டை போலவே ஆந்திர மாநிலத்திலும் வன்னியகுல க்ஷத்ரியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். 1880  களில் 'வன்னிய குல விளக்கம்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதே காலக்கட்டத்தில் தெலுங்கிலும் வெளிவந்திருக்கிறது. வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்தின் நடவடிக்கைகள் ஆந்திர மாநிலத்திலும் ஏராளமாக இருந்திருக்கின்றன. இவற்றை பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும் ஆந்திர வன்னியர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கடந்த 2009  ஆண்டு தான் கிடைத்தது.

இதற்கு காரணமாக இருந்தவர் திரு. முகி ஜீவன் அவர்கள். இணையத்தில் வன்னியர் பற்றிய தொடர் தேடலில் ஈடுப்பட்டு வந்த அவர் வெளி மாநில வன்னியர்களின் தொலைபேசி எண் கிடைத்தால் உடனே அவர்களிடம் பேசி நேரிலும் சென்று பார்த்து விட்டு வருவார். அவர் மூலமாகவே முதலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்று அங்கு வன்னியர் சங்கத்தினர் நடத்திய சிறு கூட்டத்தில் கலந்தது கொண்டேன்.  

ஆந்திர மாநில வன்னியர்களை பற்றி நான் திரட்டி வைத்திருக்கும் தகவல்களை வேறொரு கட்டுரையில் விளக்கமாக தருகிறேன் 

இப்போது என்னோடு கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுரை சேர்ந்த நிழற்ப்பட கலைஞரும் சமூக உணர்வாளருமான திரு. சிவா அவர்கள் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு...


ஆந்திர மாநிலம் நெல்லூரில் வன்னியகுல க்ஷத்ரியர் களால் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்.

திருமண மண்டபத்தின் ஒரு பகுதி
திருமண மண்டபத்தின் ஒரு பகுதி
  
ஆந்திர மாநில வன்னியர்களுடன்...

நெல்லூர் அருகே உள்ள வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு பாத்தியப்பட்ட புகழ்பெற்ற தர்மராஜா திருக்கோயில்.

நெல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற தர்மராஜா திருக்கோயிலின் ஒரு பகுதி.

கோயிலில் இருக்கும் சப்த கன்னிகளின் சிலைகள்

தர்மராஜா கோயில் முகப்பு

கையில் புத்தகம் வைத்திருப்பவரின் பெயர் திரு. திருவொத்தூர் சிவகுமார். இவரது முன்னோர்கள் சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆந்திரா சென்றவர்களாம். நெல்லூர் பகுதியில் இவரை போலவே சைதாப்பேட்டை, ஆற்காடு, வேலூர் போன்ற வடதமிழக ஊர் பெயர்களை முன்னொட்டாக வைத்திருக்கும் வன்னியர்களை காண முடிகிறது.  திரு. திருவொத்தூர் சிவகுமார் அவர்கள் ஆந்திரா மற்றும் தமிழக வன்னியர்களுக்கு பாலமாக செயல்படுபவர்.  நெல்லூர் பகுதியில்  வன்னியர் சமூகத்திற்கு இவர்பெரும்பணியாற்றி வருகிறார். 
 
நெல்லூர் தர்மராஜா கோயிலில் எடுத்துக்கொண்ட படம்.
- நன்றி- 
 திரு. ந. இறைவன் அவர்கள்  
திரு. முகி ஜீவன்  அவர்கள்
திரு. வேலூர் சிவா அவர்கள்
இதை தட்டச்சு செய்து உருவாக்கி கொடுத்த திரு. கார்த்திக் நாயகர் அவர்கள்.