Tuesday 17 July 2012

வர்மா சமாதியின் அவல நிலை




இந்திய விடுதலை, தமிழ் மொழி மேம்பாடு மற்றும் தான் பிறந்த வன்னியகுல க்ஷத்ரிய இனம் உயர்வு பெறவேண்டும் என்ற நோக்கங்களுக்காகவே வாழ்ந்தவர் சேலம் கவிச்சிங்கம் ராஜ ரிஷி சு. அர்த்தநாரீச வர்மா அவர்கள். 

வன்னியர் மேம்பாட்டுக்காக க்ஷத்ரியன், க்ஷத்ரிய சிகாமணி மற்றும் தமிழ் மன்னன் ஆகிய இதழ்களையும். நாட்டு விடுதலைக்காக வீரபாரதி என்ற இதழையும் நடத்தினார் வர்மா.
 
        


வர்மா தனது பணிக்காக குடும்பத்தை இழந்தார். அவருக்கு இரண்டு திருமணங்கள் ஆகி இருக்கிறது என்பதையும், தீவிர சமூக பணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்கள் தற்கொலை செய்து மாண்டு போய் இருக்கிறார்கள் என்பதையும் அவரது எழுத்துக்களை வைத்தும் அவரோடு பழகியவர்கள் சொல்லும் தகவல்களை வைத்தும் யூகிக்க முடிகிறது.

தன்கென்று எந்த சொத்தும் இல்லாமல் துறவியை போல வாழ்ந்த வர்மா அவர்கள் வன்னியர் பூமியான   அதாவது அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் தன் உயிர் பிரியவேண்டும் என்று விரும்பி இருக்கிறார். 

தன் இறுதி காலத்தை திருவண்ணாமலையில் கழித்த வர்மா 07  -12  - 1964  ஆம் அன்று காலமானார். 

அப்போது இருந்த வன்னிய பெரியவர்கள் உரிய சடங்குகள் செய்து ஊர்வலம் நடத்தி திருவண்ணாமலையில் ஈசானிய மூலையில் கிரிவல பாதையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

திருவண்ணாமலையில் மலையே லிங்கமாக கருதப்படுவதால், பின்னணியில் மலை இருப்பது போன்று வர்மாவுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் உள்ளே வர்மா பற்றிய கல்வெட்டும் வைக்கப்பட்டுள்ளது. சமாதியை சுற்றி நமது மக்கள் பீடமும் அமைத்திருந்தனர். வர்மாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளின் போது நிகழ்ச்சிகளை நடத்த இவை ஏதுவாக இருந்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடுகாட்டை சுற்றி நகராட்சியின் சார்பில் சுவர் எழுப்பப்பட்டது. சமாதியின் பெரும்பகுதி மண் கொண்டு மூடப்பட்டது.      


மண்ணால் மூடப்பட்டிருக்கும் வர்மாவின் சமாதி 
   

அருகிலே இருக்கும் மற்ற சமாதிகள் எல்லாம் பொலிவோடு இருக்க, வன்னியனுக்காகவே வாழ்ந்து கெட்ட வர்மாவின் சமாதியோ கேட்பாரற்று கழிவுகளுக்கு மத்தியில்  கழித்து கட்டப்பட்ட ஒன்றாக இருக்கிறது - வன்னியர்களின் நன்றி உணர்ச்சிக்கு உதாரணமாக...