2012 ஜனவரி மாதத்தில் தென் இந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான BAPASI நடத்திய சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்றேன்.
எனது தந்தையாரின் நூல்கள், க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு, கந்தசாமி கண்டர் வரலாறு போன்ற நான் வெளியிட்ட வன்னியர் வரலாற்று நூல்கள் மற்றும் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட வன்னியர் வரலாற்று நூல்கள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தேன்.
வன்னியர் வரலாறு கூறும் ஆறு ஆவணப்பட குறுந்தகடுகளை விற்பனை செய்ததோடு அவற்றை தொலைக்காட்சி பெட்டி மூலம் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தேன்.
பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த வாசகர்கள், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நமது அரங்கிற்கு வந்திருந்து ஆவணப்படங்களை பார்த்து சென்றனர்.
சமூகவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு நமது அரங்கம் விருந்தாக அமைந்தது.
|
மக்கள் வெள்ளத்தில் நமது அரங்கு |
|
அரங்கில் வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கண்டரின் படம்.
|
|
அரங்கின் உட்புறம்
|
|
பல்வகை நூல்கள் - பதாகைகள்
|
|
உடையார் பாளையத்தில் நிகழ்ந்த வன்னிய அரசர்கள் சிலரது சந்திப்பு பற்றிய பதாகை.
|
|
சேரர் வழி வந்த வன்னியகுல க்ஷத்ரிய அரசரான அரியலூர் மழவராயரின் சிற்பம் |
|
பல்லவ வம்சத்தை சேர்ந்த வன்னியகுல க்ஷத்ரிய அரசர்களான முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்.
|
|
பல்லவ வம்சத்தை சேர்ந்த வன்னியகுல க்ஷத்ரிய அரசரும் உடையார் பாளையத்தின் கடைசி ஜமீன்தாருமான மஹா ராஜ ராஜ ஸ்ரீ கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார்.
|
|
நானும்
கார்த்திக் நாயகரும் |
|
நானும் ஸ்ரீ விஜய் கண்டரும்
சென்னை புத்தகக்காட்சி முடிந்த ஒரு சில நாட்களில் தர்ம ரக்ஷன சமிதி என்ற அமைப்பினர் சென்னை அரும்பாக்கத்தில் Hindu Spiritual Fair
என்ற கண்காட்சியை நடத்தினர்.
அதன் ஒரு வரிசையில் வேளாளர், தெலுங்கு ரெட்டியார், நாடார், பள்ளர் என்று பல சமூகங்களுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் நமக்கு வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் என்ற பெயரில் அரங்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த முறை 54 அங்குல அளவுள்ள தொலைக்காட்சியில் வன்னியர் வரலாற்று ஆவண படங்களை திரையிட்டோம்.
Hindu Spiritual Fair - நான், முரளி நாயக்கர் மற்றும் கார்த்திக் நாயகர்
அரங்கின் உட்புறம்
அரங்கில் வைக்கபட்டிருந்த பதாகைகள்
பெரிய திரையில் ஆவணப்படம்
கடந்த சூன் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக காட்சியிலும் பங்கேற்றோம்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற புத்தக காட்சி
அரங்கின் உட்புறம்
பல்வேறு தரப்பினரும் நமது அரங்குகளை பார்வையிட்டு நம்முடன் கலந்துரையாடுகின்றனர். ஆனாலும் இம்சைகளுக்கும் குறைவில்லை. எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாத சில இன குழுவினர் தங்கள் பொறாமையை வெளிபடுத்து கின்றனர்.
அவர்களுக்கெல்லாம் சொல்லி கொள்வது இது தான். அய்யா ! இருக்கிறவள் அள்ளி முடிக்க தான் செய்வாள். உங்களுக்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் தயவு செய்து கொசுக்கடி போல் தொல்லை செய்யாதீர்கள்.
|