Tuesday, 17 July 2012

கிறிஸ்தவ கோயிலில் வன்னியர் விழாகடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில்
கோ
ணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயமும் ஒன்று. விருத்தாசலத்தில் இருந்து சுமார் 15  கி. மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது.    


கோணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம்
இந்த கோயில் வன்னியர் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான வீரமாமுனிவர். ஆரியனூர் என்று அழைக்கப்படும்  கோணான்  குப்பத்திற்கு வந்திருக்கிறார். தனது தோள் பையில் இரண்டு மாதா சொருபங்களை வைத்திருந்த அவர், களைப்பின் மிகுதியால் அங்குள்ள குளக்கரையில் படுத்து உறங்கி விடுகிறார். அங்கே ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு மாதா சொருபத்தை எடுத்து புதரில் போட்டு விடுகின்றனர்.      

வீரமா முனிவர் சிலை 
கண்விழித்த வீரமாமுனிவர் சிலை காணாமல் போனதை கண்டு வருத்தம் அடைந்தார். அப்பகுதியை ஆண்ட வன்னிய பாளையக்காரரான முத்துசாமி கச்சிராயரை சந்தித்து சிலை காணாமல் போனது பற்றி கூறிவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.   

படத்தின் வலது மூலையில் உள்ள சிலை தான் வீரமாமுனிவர் தொலைத்ததாக கூறப்படும் மாதா சிலை.  படத்தில் இடமிருந்து வலமாக... ஒளிப்பதிவாளர் திரு. சித்தார்த்தன் கண்டர், ஆலய ஊழியர் திரு. அந்தோணி, நான்,  கோணான்குப்பம்  திரு. ரொசாரியோ உடையார், ஆவணப்பட ஒளிப்பதிவாளர் திரு. இதாயத்துல்லா ஆகியோர்.      

பின்னர் மன்னரின் கனவில் ஒரு நாள் மாதா தோன்றி நான் காட்டில் தனித்திருக்கிறேன், எனக்கு நீ சிற்றாலயம் ஒன்று  கட்டினால் உனக்கு ஆண் வாரிசு தருவேன் என்று கூறி மறைந்து விட்டார்.

கண்விழித்து எழுந்த மன்னர் தமது ஆட்களை அழைத்து காட்டில் தேடியபோது கனவில் கண்ட அதே சொருபம் கிடைக்கபெற்றதால் மகிழ்ச்சி அடைந்தார். 

சிலை கிடைத்த இடத்திலேயே மாதாவுக்கு சிற்றாலயம் கட்டி வழிபட்டு வந்துள்ளார். மன்னருக்கு ஆண் வாரிசும் கிடைத்திருக்கிறது.     

மன்னர் முத்துசாமி கச்சிராயர் கட்டியதாக கூறப்படும் சிற்றாலயம். 

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கோணான்குப்பம் வந்த வீரமாமுனிவர், மாதா சிலை கிடைத்திருப்பதையும் கச்சிராயர் அதற்கு சிற்றாலயம் கட்டி இருப்பதையும் கண்டு மகிழ்ந்தார். பின்னர் ஆலயத்தை தனது பொறுப்பில் எடுத்து கொண்ட அவர். அன்னைக்கு பேராலயம் கட்டினார். 

இவை அனைத்தும் வீரமா முனிவரின் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள செய்திகள். 

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவை நான், முரளி நாயக்கர், கார்த்திக் நாயகர் மற்றும் ஸ்ரீ விஜய் கண்டர் ஆகியோர் நேரில் கண்டு பரவசம் அடைந்தோம்.           

இடமிருந்து வலமாக... திரு. நா. முரளி நாயக்கர், நான், மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர், திரு. அ. கார்த்திக் நாயகர், திரு.ப. ஸ்ரீ விஜய் கண்டர் ஆகியோர். 
முகாசா பரூர் ஊராட்சி மன்ற தலைவரான மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர் அவர்கள் மகிழுந்தில் ஊர்வலமாக வர, கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு நடுவே காவல் துறையினர் மக்களை விலக்கி அரசரை மேடைக்கு அழைத்து சென்றனர்.   

பாதிரியார்கள் கச்சிராயர் வம்சத்தின் பெருமையை கூறி அவருக்கு சிறப்பு செய்தனர். மன்னர் வடம் தொட்டு கொடுத்தபின் தேரோட்டம் தொடங்கியது.
 

             மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பல்லவ மன்னர் (தலைப்பாகை அணிந்திருப்பவர்).    

             மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர்
மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர்

                      மன்னருக்கு மரியாதை
பாதிரியார் கச்சிராயரின் பெருமையை கூறுதல்.
மன்னரது ஏற்புரை
  முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கச்சிராயர்கள் தேவாலயம் கட்டியதாக கூறப்பட்டாலும் முகாசா பருரிலோ அல்லது கச்சிராயர்கள் அதிக அளவில் வசிக்கும் தியாகவல்லியிலோ எந்த கச்சிராயரும் மதம் மாறவில்லை.

அதே சமயம் புதுச்சேரியில் முருங்கப்பாக்கம் முதன்மை சாலையில் நமது உறவினர் சொல்லாய்வு அறிஞர் வேல்முருகன் அவர்களின் அச்சகத்துக்கு அருகே கிறிஸ்தவ கச்சிராயர் ஒருவரின் பெயர் பொறித்த கல்வெட்டை காண முடிகிறது. 

புதுச்சேரியில் உள்ள கல்வெட்டு - கிளெமென்ட் ஜோசப் கட்சிராயர் என்பதை கவனிக்கவும்.


எந்த காலத்திலோ சிலர் மாறியும் இருக்கிறார்கள். ஆனால் கச்சிராயர்களின் புகழ் பாடும் கோணான்குப்பம் தேர் திருவிழா எந்த மாற்றமும் இல்லாமல் பாரம்பரிய பெருமையை பறைசாற்றி கொண்டு இருக்கிறது.

இது தொடர்பான ஆவணப்படத்தை பார்க்க இங்கே அழுத்தவும். 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_2490.html