Friday 13 July 2012

திகிலர் ( வன்னியகுல க்ஷத்ரியர்) வரலாறு கூறும் பெங்களூரு தர்மராஜா கோயில்


கர்நாடக மாநிலத்தில் திகிலர் என்ற பெயரில் வன்னியகுல க்ஷத்ரியர்கள் வாழ்ந்து வருகின்றனர். தீக்குலத்தவர் என்பதன் சுருக்கமே திகிலர். வரலாற்றுக்கு எட்டிய காலம் தொட்டு பெங்களூர் உள்ளிட்ட பூர்வீக தமிழ் பகுதிகளில் திகிலர்கள் வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு வரலாறு மற்றும் சமூகவியல் நூல்கள் திகிலர்களை தமிழர்கள் என்றும் குறிப்பாக வன்னியகுல க்ஷத்ரியர்கள் என்றும் கூறுகின்றன.
    
இவர்கள் பேசும் மொழி கன்னடம் என்றாலும் அது முழுமையான கன்னடமாக இல்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளின் கலவையாக இருக்கிறது.

திகிலர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் சான்றாக திரௌபதி அம்மன் ஆலயங்கள் விளங்குகின்றன. தமிழ்நாட்டில் காணப்படுவதை போலவே கர்நாடக மாநிலம் முழுவதும் திரௌபதி அம்மன் ஆலயங்கள் காணப்படுகின்றன. இந்த ஆலயங்களில் திகிலர்களே
அறங்காவலர்களாகவும் பூசாரிகளாகவும் திகழ்கின்றனர்.  இந்த ஆலயங்களில் நடத்தப்படும் கரக திருவிழா மிகவும் புகழ் பெற்றது.

குறிப்பாக பெங்களூர் நகரில் சிட்டி மார்கெட் அருகே அமைந்துள்ள ஸ்ரீ தர்மராய சுவாமி திருகோயிலில் நடத்தப்படும் கரக திருவிழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர்களே வந்து விழாவை தொடங்கி வைக்கின்றனர்.

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விழாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பெங்களூரின் பிறப்பகுதிகளில் இருந்த திரௌபதி அம்மன் கோயில்களையும் பார்வையிட்டேன். அப்போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு... 


பெங்களூர் ஸ்ரீ தர்மராய சுவாமி கோயில்

கோயிலின் உட்புறம் 

கோயிலில் இடம்பெற்றுள்ள போத்தராஜா புடைச்சிற்பம் . போத்தராஜா என்பதற்கு பல்லவ அரசன் என்று பொருள். திரௌபதி அம்மன் அல்லது தர்மராஜா கோயில்களில் இந்த  சிற்பம் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். திண்டிவனம் போன்ற பகுதிகளில் இதே சிற்பத்தை "முத்தால ராவுத்தன்" என்றும் கூறுகின்றனர்.

ஸ்ரீ திரௌபதி அம்மன் நெருப்பில் இருந்து தோன்றும் காட்சி. திரௌபதி நெருப்பில் இருந்து தோன்றியவர். வன்னியர்களும் நெருப்பில் இருந்து தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் தான் வன்னியர்கள் திரௌபதி அம்மன் வழிப்படுகின்றனர்.   

கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் பீமனின் தண்டாயுதம்.
கோயிலில் உள்ள வீர குமாரர் சிலை. கர்நாடக மாநில திரௌபதி அம்மன் கோயில்களில் கரக விழாவையொட்டி ஏராளமான வன்னியர்கள் விரதம் இருப்பார்கள். விழாவின் போது போர் வாள்களை ஏந்தியபடி வருவார்கள். அம்மன் உத்தரவு கிடைத்தால் தங்கள் மார்பில் வாளால் தாக்கி கொண்டு போர்க்கலையை நிகழ்த்திக் காட்டுவார்கள். இவர்களே வீரகுமாரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பெங்களூரு விழாவில் ஆயிரக்கணக்கான திகிலர்கள் வீர வாளோடு வலம் வருவதைப் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தில் திகிலர்கள் போர்வாள் வைத்திருக்க உரிமம் பெறவேண்டிய அவசியம் இல்லை. 
பால்குடம் ஏந்தி நிற்கும் வன்னிய பெண்கள்
விழாவையொட்டி தமிழ் பக்தி பாடல்கள் நாட்டுப்புற முறைப்படி பாடப்படுகின்றன. தமிழ்நாட்டில் கேட்கும் அதே சந்தம் தாளம் ராகத்துடன் பாடல்களை பாடுகின்றனர். தமிழ் பாடல்களை அதே உச்சரிப்பில் கன்னடம் அல்லது தெலுங்கில் எழுதி வைத்து கொண்டு பாடப்படுகிறது.  
பெங்களூர் தர்மராய சுவாமி கோயிலில் பல ஆண்டுகளாக கரகம் எடுத்து வரும் திரு. லோகேஷ் அவர்கள் கருவறை முன்பு செங்கோலுடன் காட்சி அளிக்கிறார்.
முக்கிய சடங்குகளுக்காக கப்பன் பூங்காவை நோக்கி செல்கிறார் திரு. லோகேஷ் அவர்கள்.
கப்பன் பூங்காவில் நடக்கும் சம்பிரதாய நிகழ்ச்சிகள்.
திகலர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் கையில் மாட்டி நடனமாடுவதற்கான இசை சிலம்புகள்
ஒளிவெள்ளத்தில் மிதக்கும் கோயில் - புறப்பட தயாராக நிற்கும் தேர்.
படத்தில் காணப்படுவது போன்று வாழைக்காயில் ஒருவித குச்சியை சொருகி அதனை தேர் மீது பக்தர்கள் வீசுகின்றனர். விழாவின் போது இது போன்ற வாழைகாய்கள் கூடை கூடையாக விற்கப்படுகின்றன
கரகம் ஏந்தி வரும் திரு. லோகேஷ் அவர்களை வீரக்குமாரர்கள் பாதுகாப்பாக அழைத்து செல்கின்றனர். 
வாளேந்தி நிற்கும் வன்னிய வீரர்
வாளேந்தி நிற்கும் வன்னிய வீரர்கள்
இந்த தர்காவிற்குள் கரகம் வந்து செல்வது வழக்கம். மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இந்த விழா கூறப்படுகிறது. 
பெங்களூர் புறநகர் பகுதியான விஜயபுராவில் திரௌபதி அம்மன் கோயில் கரக விழாவை ஒட்டி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

விஜயபுரா திரௌபதி அம்மன் கோயில்
கோயிலில் குவித்து வைக்கப்பட்டுள்ள போர் வாள்கள்.

விழாவையொட்டி தமிழ் பாட்டுக்கு தெருக்கூத்து பாணியில் ஆடுகிறார் ஒரு திகிலர்.
'திகில வைபவா' என்ற திகிலர்களுக்கான கன்னட பத்திரிக்கையின் ஆசிரியர் நம்மை அவரது வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். படத்தில் இடமிருந்து வலமாக பத்திரிக்கையாளர் திரு. தமிழ் செல்வன், திகில வைபவா ஆசிரியர், திரு. மகாலிங்கம், நான், திரு.சுவாமி ராமானுஜம் ஆகியோர்  
'திகில வைபவா' மாத இதழ்

பெங்களூர் ஸ்ரீ ராம்புரத்தில் திரௌபதி அம்மன் கோயில் ஒன்றின் முன்பு வைக்கப்பட்டுள்ள அர்ஜுனன் தபசுக்கான கம்பம்.  



                                                                        - நன்றி -

                                                      திரு.சுவாமி ராமானுஜம்
                                                      திரு. தமிழ் செல்வன்
                                                      திரு. மகாலிங்கம்
                                                      திரு. அ. கார்த்திக் நாயகர்