Wednesday, 4 July 2012

திருவிடைச்சுரத்தில் எனது தந்தையாரின் கள ஆய்வு.


காந்தவராயர் சேந்தவராயர் வரலாறு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக எனது தந்தையார் கவிஞர் திரு.காவிரி நாடன் அவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டு அருகில் உள்ள திருவடிசூலம் என்று அழைக்கப்படும் திருவிடைச்சுரத்துக்கு சென்றிருந்தார்.  அங்கு அவர் திரட்டிய பல்வேறு செய்திகள் அவரது நூல்களில் வெளிவர உள்ளன.

கள ஆய்வின் போது எடுக்கப்பட்ட நிழற்ப்படங்களை கீழே கொடுத்திருக்கிறேன்.

காந்தவராயரின் வரலாறு நிழற்படங்களுக்கு கீழே ஆவணப்படமாக உங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது.  


மன்னர் காந்தவராயர் ஆட்சி செய்த திருவிடைச்சுரத்தில் சிவபெருமான் மரகத லிங்க வடிவில் காட்சி அளிக்கும் அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலின் உள்புறம்  

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில்  கல்வெட்டுக்கள்  





திருவிடைச்சுரம்  கோட்டை குன்றின் முன்பு எனது தந்தையார் கவிஞர் காவிரி நாடன் அவர்கள். 

வன்னியகுல க்ஷத்ரிய மன்னர் காந்தவராயர் ஆட்சிக்குட்பட்ட மலைப்பகுதி.

வன்னியகுல க்ஷத்ரிய மன்னர் காந்தவராயர் ஆட்சிக்குட்பட்ட மலைப்பகுதி

திருவிடைச்சுரம் கோட்டைக்குன்று

மன்னர் காந்தவராயர் ஆட்சிக்குட்பட்ட மலைப்பகுதி.

பனைமரங்களுக்கு பின்னால் காட்சி அளிக்கும் சிறிய குன்று தான் 'குப்பச்சி குன்று'.

குப்பச்சி குன்றுக்கு செல்லும் வழியில் எனது தந்தையார்

திருவிடைச்சுரம் பகுதி மக்களிடம் இருந்து தகவல்களை சேகரிக்கிறார் எனது தந்தையார். இடமிருந்து இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் பெரியவர் திரு. ரத்னம் அவர்கள். வன்னியர் புராணத்தை பதிப்பித்த பெருமைக்குரியவர் இவர்.   

திருவிடைச்சுரத்தில் கோட்டை கட்டி ஆட்சி செய்து, விஜயநகர அரசன் கிருஷ்ணதேவராயனின் பெரும்படைகளை புறமுதுகிட்டு ஓட செய்த வன்னியகுல க்ஷத்ரிய அரச சகோதரர்கள் காந்தவராயர் மற்றும் சேந்த தவராயர் பற்றிய வரலாற்றை இங்கு காண்க:

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_9868.html


                                                                - நன்றி -

திருவிடைச்சுரத்திற்கு செல்ல எனது தந்தையாருக்கு தூண்டுதலாக இருந்த பெரியவர் திரு. ரத்தினம் அவர்கள்.

நிழற்படங்கள் எடுத்து தந்த மதுராந்தகம் செய்தியாளர் திரு. இளங்கோ அவர்கள்.

என்னை ஊக்குவித்து இந்த வலைப்பூவை மலரவைத்து வைத்துவரும்
திரு. அ. கார்த்திக் நாயகர் அவர்கள்.     

என் ஆந்திர பயணம்

தமிழ்நாட்டை போலவே ஆந்திர மாநிலத்திலும் வன்னியகுல க்ஷத்ரியர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். 1880  களில் 'வன்னிய குல விளக்கம்' என்ற நூல் தமிழில் வெளிவந்த அதே காலக்கட்டத்தில் தெலுங்கிலும் வெளிவந்திருக்கிறது. வன்னியகுல க்ஷத்ரிய மகா சங்கத்தின் நடவடிக்கைகள் ஆந்திர மாநிலத்திலும் ஏராளமாக இருந்திருக்கின்றன. இவற்றை பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும் ஆந்திர வன்னியர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கடந்த 2009  ஆண்டு தான் கிடைத்தது.

இதற்கு காரணமாக இருந்தவர் திரு. முகி ஜீவன் அவர்கள். இணையத்தில் வன்னியர் பற்றிய தொடர் தேடலில் ஈடுப்பட்டு வந்த அவர் வெளி மாநில வன்னியர்களின் தொலைபேசி எண் கிடைத்தால் உடனே அவர்களிடம் பேசி நேரிலும் சென்று பார்த்து விட்டு வருவார். அவர் மூலமாகவே முதலில் ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்று அங்கு வன்னியர் சங்கத்தினர் நடத்திய சிறு கூட்டத்தில் கலந்தது கொண்டேன்.  

ஆந்திர மாநில வன்னியர்களை பற்றி நான் திரட்டி வைத்திருக்கும் தகவல்களை வேறொரு கட்டுரையில் விளக்கமாக தருகிறேன் 

இப்போது என்னோடு கூட்டத்தில் கலந்து கொண்ட வேலுரை சேர்ந்த நிழற்ப்பட கலைஞரும் சமூக உணர்வாளருமான திரு. சிவா அவர்கள் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு...


ஆந்திர மாநிலம் நெல்லூரில் வன்னியகுல க்ஷத்ரியர் களால் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்.

திருமண மண்டபத்தின் ஒரு பகுதி
திருமண மண்டபத்தின் ஒரு பகுதி
  
ஆந்திர மாநில வன்னியர்களுடன்...

நெல்லூர் அருகே உள்ள வன்னியகுல க்ஷத்ரியர்களுக்கு பாத்தியப்பட்ட புகழ்பெற்ற தர்மராஜா திருக்கோயில்.

நெல்லூர் அருகே உள்ள புகழ்பெற்ற தர்மராஜா திருக்கோயிலின் ஒரு பகுதி.

கோயிலில் இருக்கும் சப்த கன்னிகளின் சிலைகள்

தர்மராஜா கோயில் முகப்பு

கையில் புத்தகம் வைத்திருப்பவரின் பெயர் திரு. திருவொத்தூர் சிவகுமார். இவரது முன்னோர்கள் சென்னை திருவொற்றியூரில் இருந்து ஆந்திரா சென்றவர்களாம். நெல்லூர் பகுதியில் இவரை போலவே சைதாப்பேட்டை, ஆற்காடு, வேலூர் போன்ற வடதமிழக ஊர் பெயர்களை முன்னொட்டாக வைத்திருக்கும் வன்னியர்களை காண முடிகிறது.  திரு. திருவொத்தூர் சிவகுமார் அவர்கள் ஆந்திரா மற்றும் தமிழக வன்னியர்களுக்கு பாலமாக செயல்படுபவர்.  நெல்லூர் பகுதியில்  வன்னியர் சமூகத்திற்கு இவர்பெரும்பணியாற்றி வருகிறார். 
 
நெல்லூர் தர்மராஜா கோயிலில் எடுத்துக்கொண்ட படம்.
- நன்றி- 
 திரு. ந. இறைவன் அவர்கள்  
திரு. முகி ஜீவன்  அவர்கள்
திரு. வேலூர் சிவா அவர்கள்
இதை தட்டச்சு செய்து உருவாக்கி கொடுத்த திரு. கார்த்திக் நாயகர் அவர்கள்.


மக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி


மக்கள் தொலைகாட்சியில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் 01 .09 . 2011 (விநாயகர் சதுர்த்தி) அன்று "சிறப்பு விருந்தினர்" பகுதியில் எனது பேட்டி ஒளிபரப்பானது. இதற்கு காரணமாக இருந்த திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள், அவரை  அறிமுகம் செய்து வைத்த திரு. சந்திர செயன் அவர்கள், பேட்டியின் போது உடனிருந்த நண்பர் திரு. முரளி நாயக்கர் அவர்கள், பேட்டியை குறுந்தகடில் பதிவு செய்த திருச்செங்கோடு சைதன்யா ஸ்டுடியோ உரிமையாளர் திரு. பாபு அவர்கள், இதற்கு ஏற்பாடு செய்த திருச்செங்கோடு பகுதி சன் டிவி நிருபர் திரு. இதாயத்துல்லா அவர்கள் மற்றும் இதனை தட்டச்சு செய்து உருவாக்கி கொடுத்த திரு. அ. கார்த்திக் நாயகர் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.   

Monday, 2 July 2012

வன்னியர் புராணம் - தெருக்கூத்து



அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அக்னிகுல க்ஷத்ரியர்களான வன்னியர்களின் பெருமைமிகு வரலாற்றுக்கு சாட்சியாக நிற்கிறது. இம்மாவட்டத்தில் தான் வன்னியர் புராண நாடகம் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தெருக்கூத்தை காண்கின்ற அறிய வாய்ப்பு பத்திரிக்கையாளர் திரு. தமிழ்செல்வன், மூங்கில்துறைப்பட்டு திரு. விஜய் ஆனந்த், தொண்டமானுர் திரு. சீனிவாசன் ஆகியோரால் எனக்கு கிடைத்தது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் வரகூர் கிராமத்தில் நடைபெற்ற வன்னியர் நாடகத்தில் மூன்றாம் நாள் ( 30 .06 . 2012 ) அன்று இரவு வன்னியன் பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விடிய விடிய விழித்திருந்து வரலாற்று சிறப்பு மிக்க அந்த நிகழ்த்துகலையை நேரில் கண்டு பரவசமடைந்தேன்.

வன்னியர் பிறப்பு நிகழ்ச்சியின் கதை சுருக்கம் இது தான். அதாவது, வாதாபி, அனதாபி என்ற இரண்டு அரக்கர்கள் தங்களை மனிதர்கள் விலங்குகள் உள்ளிட்ட எதனாலும் தங்களை கொள்ள முடியாத வரத்தை சிவபெருமானிடம் இருந்து பெற்றனர். ஆனால் அக்னியால் தங்களை அழிக்க முடியாது என்ற வரத்தை பெற மறந்துவிட்டனர். தேவர்கள் மற்றும் மனிதர்களை துன்பப்படுத்திய வாதாபியை அழிக்க சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோர் முடிவு செய்தனர் . இதற்காக சம்பு மகரிஷிக்கு அசயந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். புத்திர பேற்றுக்காக சம்பு மகரிஷி யாகம் செய்ய அந்த வேள்வி தீயில் இருந்து ருத்ர வன்னிய மகாராஜா படைக்கலன்களுடன் தோன்றினார். அவருக்கு இந்திரன் தனது மகள் மந்திரமாலையை திருமணம் செய்தது வைக்கிறார். இந்த நிகழ்ச்சி தான் வன்னியர் பிறப்பு அன்று இரவு முழுவதும் தெருக்கூத்தாக நடிக்கப்பட்டது.    

அந்த நிகழ்ச்சியில் நான் எடுத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம்  வரகூர் கிராமத்தில் நடைபெற்ற ருத்ர வன்னிய நாடக அழைப்பிதழ்.

வன்னியர் புராணம் தெருக்கூத்தை ஒட்டி காமாட்சி அம்மனுக்காக அலங்கரிக்கப்பட்ட கரகம்.  கர்நாடக மாநிலத்தில் 'திகிலர்கள்' என்று அழைக்கப்படும் வன்னியகுல க்ஷத்ரியர்கள் இதே போன்ற பூ கரகத்தை பயன்படுத்தி தான் திரௌபதி அம்மனுக்கு விழா எடுக்கிறார்கள்.  



தெருக்கூத்து பந்தல் வன்னியர் புராணம் தெருக்கூத்து நடக்கும் போது அதன் பந்தல் கழிகளில் ராட்டினம் கட்டி ஏற்றி இறக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். யாகத்தீ வளர்க்கும் போது பந்தல் 20 அடி உயரத்திற்கு தூக்கப்படும். 


பந்தலை உயர்த்துவதற்காக கட்டப்பட்டிருக்கும் ராட்டினம் 

ஒப்பனை செய்துகொள்ளும் தெருக்கூத்து கலைஞர்
தெருக்கூத்து தொடங்குவதற்கு முன்னால் நடைபெறும் Warm up
விநாயகர் மற்றும் முருகப்பெருமான் அருளோடு நாடகம் தொடங்குதல் 
பார்வையாளர்களில் ஒரு பகுதி
சிவபெருமான் 
ஸ்ரீ விஷ்ணு

ஒப்பனை கூடத்திலிருந்து அரங்கிற்கு காமாட்சி அம்மன் வரும் வழி எங்கும் விளக்கேற்றி வைக்கப்பட்டிருத்தல்


காமாட்சி அம்மன் அரங்கிற்கு வருதல்
காமாட்சி அம்மன் வருகையின் போது வைக்கப்பட்ட வாணவெடிகள்

காமாட்சி அம்மன் வருகையின் போது அருள் வந்து விழுந்த பெண்
காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு ஆசி வழங்குதல்




சம்பு மகரிஷி காமாட்சி அம்மனை வணங்குதல் 
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் நடனபோட்டியின் போது சிவன் ஒரு காலை தூக்கி ஆட, தன்னால் அவ்வாறு ஆட முடியாமல் பார்வதி நாணமடைந்தார். அந்த நாணத்தில் இருந்து உருவானவள் அசயந்தி. இவளையே சம்பு மகரிஷிக்கு திருமணம் செய்து வைத்தனர்.    


சிவன், விஷ்ணு, காமாட்சி அம்மன் முன்னிலையில் சம்பு மகரிஷிக்கும் அசயந்திக்கும் திருமணம் நடைபெறுதல்  

ருத்ர வன்னியர் தோன்றுவதற்காக சம்பு மகரிஷி யாகம் வளர்ப்பதற்கான யாக குண்டம். 



சம்பு மகரிஷி யாகம் வளர்த்தல்

கொழுந்து விட்டு எரியும் யாகத்தீ

வீர வன்னியர் நெருப்பில் இருந்து தோன்றுதல்

வீர வன்னியர் நெருப்பில் இருந்து தோன்றுதல் 
 வீர வன்னியர் நெருப்பில் இருந்து தோன்றுதல்

 

 ருத்ர வன்னியராக தோன்றும் வழக்கறிஞர் திரு. சீனிவாசன்  அவர்கள்



 ருத்ர வன்னியருக்கு மாமனாரான 'தேவர்களின் தலைவன்' தேவேந்திரன்.


 தேவேந்திரன் மகளான மந்திரமாலை என்ற லாவண்ய சாரவல்லிக்கும் ருத்ர வன்னியருக்கும் திருமணம் நடைபெறுதல்


 பெண் வீட்டார் சீர் கொடுத்தல்.  

 அரசாணி கால் நடுதல்


வன்னியர் தாலி 


ருத்ர வன்னியர் மந்திரமாலைக்கு தாலி கட்டுதல்.



 மறுவீடு  போதல்


மறுவீடு செல்லும் வன்னியர் நாடக குழுவுடன் நான் 


 ருத்ர வன்னியருக்கு அடுத்து இருப்பவர் பத்திரிக்கையாளர் திரு.தமிழ் செல்வன் அடுத்தது நான், எனக்கு அடுத்து இருப்பவர் திரு. சீனிவாசன் அவர்கள் (தண்டராம் பட்டு அருகே உள்ள தொண்டமானுர் கிராமத்தை சேர்ந்த இவர் நம்மை நன்கு உபசரித்தார்).

வன்னியர் நாடக குழுவுடன் நான் 




இதை தட்டச்சு செய்து உருவாக்கி கொடுத்த திரு. அ. கார்த்திக் நாயகர் அவர்களுக்கு நன்றி...