Tuesday 17 July 2012

கடலூர் யாத்திரை


க்ஷத்ரியன் இதழ் தொகுப்பை போலவே 'வீரபாரதி' இதழ் தொகுப்பை கொண்டு வர திட்டமிட்டிருக்கிறேன். வீரபாரதி என்பது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்காக ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களால் 1931  ஆம் ஆண்டு வாரம் மும்முறை நடத்தப்பட்ட பத்திரிக்கை. இந்திய விடுதலை போராட்டத்திற்காக நடத்தப்பட்ட இதழ் என்பதால் வெள்ளைக்கார அரசு இதனை தடை செய்து விட்டது. வீரபாரதி இதழில் வெளியான சில செய்திகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்திய நாடாளுமன்றத்தில் வாசித்து, அச்சு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து அதன் மூலம் வீரபாரதி தடை செய்யபட்டிருக் கிறது. இதனை 1950  களில் வெளிவந்த தமிழ் மன்னன் இதழ்களில் வர்மா கூறியிருக்கிறார்.

வீரபாரதி இதழ் தொகுப்பை வெளியிடுவதற்கு ஆதரவு கேட்டு கடந்த மே 2012  இறுதியில் எனது மாப்பிள்ளை ஸ்ரீ விஜய் கண்டரை அழைத்து கொண்டு மகிழுந்தில் கடலூர் சென்றேன்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. பி. ஆர். எஸ். வெங்கடேசன், கடலூர் மாவட்ட பா ம  க செயலாளர் வடகுத்து திரு. ஜெகன், இளம் துறவி திரு. விஜயகுமார் சுவாமிகள், வன்னியர் நல ஊழியர் திரு. கு. சாமி கச்சிராயர், பத்திரிகையாளர் திரு. இளையராஜா பூபதியார் ஆகியோரை சந்தித்தேன்.   

   கடலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. பி. ஆர். எஸ். வெங்கடேசன் அவர்களுடன் நான்...     


 கடலூர் மாவட்ட பா ம  க செயலாளர் வடகுத்து திரு. ஜெகன் அவர்களுடன் நான்...

                     அருள் திரு. விஜயகுமார் சுவாமிகளுடன் ஸ்ரீ விஜய் கண்டரும் நானும்... 

          தியாகவல்லி திரு. கு. சாமி கச்சிராயர் அவர்கள் - கண்கொடுத்த நாச்சியப்ப கச்சிராயர் திருகோயில், நொச்சி காடு. 


பத்திரிகையாளர் திரு. இளையராஜா பூபதியார் அவர்கள்.  

 நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு வார்த்தைகளை பெற்று கொண்டு வரலாற்று ஆய்வு பணிகளை தொடங்கி விட்டேன். 

கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பூண்டியாங் குப்பத்தில் கட்டப்பட்டுள்ள ராமச்சந்திர படையாட்சி தர்ம சத்திரத்தை பலமுறை பார்த்திருந்தாலும் இப்போது தான் படம் எடுத்தேன். ராமச்சந்திர படையாட்சியார் கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. பி. ஆர். எஸ். வெங்கடேசன் அவர்களின் முன்னோர்களில் ஒருவர்.  1942  லேயே தர்ம சத்திரம் கட்டி மற்றவர்களுக்கு உணவளிக்கும் நிலையில்  அவர்கள் இருந்துள்ளனர்.    


 ராமச்சந்திர படையாட்சியார் தர்ம சத்திரம்.


            தர்ம சத்திர கல்வெட்டு.                              
 

இதையடுத்து உறவினர் திரு. சாமி கச்சிராயர் அவர்களுடன் தியாகவல்லி சென்றோம். முகாசா பரூரை போலவே கச்சிராயர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது தியாகவல்லி தீவு. "பூபதியார்" மற்றும் "வர்மராயர்" பட்டம் கொண்ட வன்னியர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தியாகவல்லி அருகே நடுத்திட்டில் கச்சிராயர்களின் அரண்மனை ஒன்று பெருமளவு சிதிலம் அடைந்து விட்ட நிலையில் முகப்பின் ஒரு பகுதி மட்டும் அழகுடன் காட்சி அளிக்கிறது. திண்ணையில் பல்லக்கு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  

 கச்சிராயர்களின் அரண்மனை - நடுத்திட்டு

  கச்சிராயர்களின் அரண்மனை - நடுத்திட்டு

  அரண்மனை கதவு


 பல்லக்கின் முன்பு நான்

  பல்லக்கின் முன்பு  ஸ்ரீ விஜய் கண்டரும் சாமி கச்சிராயரும்.


 பல்லக்கு 

  பல்லக்கு

முகாசா பரூரில் கோலோச்சி வரும் கச்சிராயர்களும் தியாகவல்லி கச்சிராயர்களும் ஒரே வகையறா தான். தியாகவல்லி, நொச்சி காடு, நடுத்திட்டு, திருச்சோபுரம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய தீவு தான் தியாகவல்லி. இந்த ஊர் சங்க காலம் தொட்டு பழமையானது என்பதற்கும்  துறைமுக பட்டினமாக இருந்திருகிறது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.          

 தியாகவல்லியில் 1992  ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடம். 




ஒரு புறம் கடலும் மூன்று புறமும் உப்பனாறும் சூழ்ந்துள்ள இப்பகுதியை பிச்சாவரம், தீவு கோட்டை போன்ற பகுதிகளுடன் ஒப்பிடலாம். எதிரிகளால் சுலபமாக ஊடுருவ முடியாத இப்பகுதியை கச்சிராயர்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர்.

தியாகவல்லியை சுற்றி உள்ள உப்பனாற்றின் நீர் மட்டம் நிலையாக இருக்காது. இப்பகுதியில் தில்லை காடுகள் எனப்படும் ஒரு வகை மாங்க்ரோவ் காடுகள் அடர்ந்து காணப்படுகின்றன. இக்காட்டின் நடுவே நள்ளிரவில் எங்களை வேட்டைக்கு அழைத்து சென்றார் சாமி கச்சிராயர்.   

 தில்லை செடி எனப்படும் ஒரு வகை மாங்க்ரோவ் தாவரம். ஒரு காலத்தில் சிதம்பரம் முழுவதும் தில்லை செடிகள் இருந்துள்ளன. அதனால் தான் இறைவன் தில்லை நாயகன் என்றும் இறைவி தில்லை நாயகி என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். 

தில்லை காட்டில் நள்ளிரவில் வேட்டை பயணம்

'வேட்டை தலைவர்' திரு. கு. சாமி கச்சிராயர்  அவர்கள் 

ஒருவகையான ஜெல்லி உயிரினங்கள் சேறெங்கும் சிதறி கிடக்கின்றன.

காட்டு சமையல் - வேட்டை விருந்து 


இந்த வேட்டை பயணத்தை வீடியோ எடுத்திருந்தால் சத்தியமாக டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி தான். சுமார் மூன்று மணி நேரம் தில்லை காடுகளின் நடுவே சேற்றிலும் கழுத்தளவு நீரிலும் நடந்தோம். 
    

வேட்டையில் சிக்கிய கடல்வாழ் உயிரினங்களை கச்சிராயர் ஐந்தே நிமிடத்தில் சுட்டு தந்தார். கருப்பும் ஓர் அழகு, காந்தலும் ஓர் சுவையல்லவா!

நன்றி கச்சிராயரே!

சிலிர்ப்பூட்டும் இந்த நள்ளிரவு நடைபயணத்திற்கும் உங்கள் அன்பிற்கும்...

கிறிஸ்தவ கோயிலில் வன்னியர் விழா



கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில்
கோ
ணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயமும் ஒன்று. விருத்தாசலத்தில் இருந்து சுமார் 15  கி. மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது.    


கோணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம்
இந்த கோயில் வன்னியர் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான வீரமாமுனிவர். ஆரியனூர் என்று அழைக்கப்படும்  கோணான்  குப்பத்திற்கு வந்திருக்கிறார். தனது தோள் பையில் இரண்டு மாதா சொருபங்களை வைத்திருந்த அவர், களைப்பின் மிகுதியால் அங்குள்ள குளக்கரையில் படுத்து உறங்கி விடுகிறார். அங்கே ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு மாதா சொருபத்தை எடுத்து புதரில் போட்டு விடுகின்றனர்.      

வீரமா முனிவர் சிலை 
கண்விழித்த வீரமாமுனிவர் சிலை காணாமல் போனதை கண்டு வருத்தம் அடைந்தார். அப்பகுதியை ஆண்ட வன்னிய பாளையக்காரரான முத்துசாமி கச்சிராயரை சந்தித்து சிலை காணாமல் போனது பற்றி கூறிவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.   

படத்தின் வலது மூலையில் உள்ள சிலை தான் வீரமாமுனிவர் தொலைத்ததாக கூறப்படும் மாதா சிலை.  படத்தில் இடமிருந்து வலமாக... ஒளிப்பதிவாளர் திரு. சித்தார்த்தன் கண்டர், ஆலய ஊழியர் திரு. அந்தோணி, நான்,  கோணான்குப்பம்  திரு. ரொசாரியோ உடையார், ஆவணப்பட ஒளிப்பதிவாளர் திரு. இதாயத்துல்லா ஆகியோர்.      

பின்னர் மன்னரின் கனவில் ஒரு நாள் மாதா தோன்றி நான் காட்டில் தனித்திருக்கிறேன், எனக்கு நீ சிற்றாலயம் ஒன்று  கட்டினால் உனக்கு ஆண் வாரிசு தருவேன் என்று கூறி மறைந்து விட்டார்.

கண்விழித்து எழுந்த மன்னர் தமது ஆட்களை அழைத்து காட்டில் தேடியபோது கனவில் கண்ட அதே சொருபம் கிடைக்கபெற்றதால் மகிழ்ச்சி அடைந்தார். 

சிலை கிடைத்த இடத்திலேயே மாதாவுக்கு சிற்றாலயம் கட்டி வழிபட்டு வந்துள்ளார். மன்னருக்கு ஆண் வாரிசும் கிடைத்திருக்கிறது.     

மன்னர் முத்துசாமி கச்சிராயர் கட்டியதாக கூறப்படும் சிற்றாலயம். 

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கோணான்குப்பம் வந்த வீரமாமுனிவர், மாதா சிலை கிடைத்திருப்பதையும் கச்சிராயர் அதற்கு சிற்றாலயம் கட்டி இருப்பதையும் கண்டு மகிழ்ந்தார். பின்னர் ஆலயத்தை தனது பொறுப்பில் எடுத்து கொண்ட அவர். அன்னைக்கு பேராலயம் கட்டினார். 

இவை அனைத்தும் வீரமா முனிவரின் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள செய்திகள். 

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவை நான், முரளி நாயக்கர், கார்த்திக் நாயகர் மற்றும் ஸ்ரீ விஜய் கண்டர் ஆகியோர் நேரில் கண்டு பரவசம் அடைந்தோம்.           

இடமிருந்து வலமாக... திரு. நா. முரளி நாயக்கர், நான், மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர், திரு. அ. கார்த்திக் நாயகர், திரு.ப. ஸ்ரீ விஜய் கண்டர் ஆகியோர். 
முகாசா பரூர் ஊராட்சி மன்ற தலைவரான மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர் அவர்கள் மகிழுந்தில் ஊர்வலமாக வர, கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு நடுவே காவல் துறையினர் மக்களை விலக்கி அரசரை மேடைக்கு அழைத்து சென்றனர்.   

பாதிரியார்கள் கச்சிராயர் வம்சத்தின் பெருமையை கூறி அவருக்கு சிறப்பு செய்தனர். மன்னர் வடம் தொட்டு கொடுத்தபின் தேரோட்டம் தொடங்கியது.
 

             மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பல்லவ மன்னர் (தலைப்பாகை அணிந்திருப்பவர்).    

             மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர்
மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர்

                      மன்னருக்கு மரியாதை
பாதிரியார் கச்சிராயரின் பெருமையை கூறுதல்.
மன்னரது ஏற்புரை
  முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கச்சிராயர்கள் தேவாலயம் கட்டியதாக கூறப்பட்டாலும் முகாசா பருரிலோ அல்லது கச்சிராயர்கள் அதிக அளவில் வசிக்கும் தியாகவல்லியிலோ எந்த கச்சிராயரும் மதம் மாறவில்லை.

அதே சமயம் புதுச்சேரியில் முருங்கப்பாக்கம் முதன்மை சாலையில் நமது உறவினர் சொல்லாய்வு அறிஞர் வேல்முருகன் அவர்களின் அச்சகத்துக்கு அருகே கிறிஸ்தவ கச்சிராயர் ஒருவரின் பெயர் பொறித்த கல்வெட்டை காண முடிகிறது. 

புதுச்சேரியில் உள்ள கல்வெட்டு - கிளெமென்ட் ஜோசப் கட்சிராயர் என்பதை கவனிக்கவும்.


எந்த காலத்திலோ சிலர் மாறியும் இருக்கிறார்கள். ஆனால் கச்சிராயர்களின் புகழ் பாடும் கோணான்குப்பம் தேர் திருவிழா எந்த மாற்றமும் இல்லாமல் பாரம்பரிய பெருமையை பறைசாற்றி கொண்டு இருக்கிறது.

இது தொடர்பான ஆவணப்படத்தை பார்க்க இங்கே அழுத்தவும். 

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_2490.html

புத்தகக் காட்சிகள்



2012 ஜனவரி மாதத்தில் தென் இந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமான BAPASI நடத்திய சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்றேன்.

எனது தந்தையாரின் நூல்கள், க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு, கந்தசாமி கண்டர் வரலாறு போன்ற நான் வெளியிட்ட வன்னியர் வரலாற்று நூல்கள் மற்றும் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட வன்னியர் வரலாற்று நூல்கள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்திருந்தேன்.

வன்னியர் வரலாறு கூறும் ஆறு ஆவணப்பட குறுந்தகடுகளை விற்பனை செய்ததோடு அவற்றை தொலைக்காட்சி பெட்டி மூலம் காட்சிப்படுத்திக்  கொண்டிருந்தேன். 

பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த வாசகர்கள், எழுத்தாளர்கள், திரைப்படக்  கலைஞர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நமது அரங்கிற்கு வந்திருந்து ஆவணப்படங்களை பார்த்து சென்றனர்.

சமூகவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு நமது அரங்கம் விருந்தாக அமைந்தது.      

மக்கள் வெள்ளத்தில் நமது அரங்கு 
அரங்கில் வைக்கப்பட்டிருந்த கந்தசாமி கண்டரின் படம். 
   
அரங்கின் உட்புறம் 

பல்வகை நூல்கள் - பதாகைகள் 

உடையார் பாளையத்தில் நிகழ்ந்த வன்னிய அரசர்கள் சிலரது சந்திப்பு பற்றிய பதாகை. 

சேரர் வழி வந்த வன்னியகுல க்ஷத்ரிய அரசரான அரியலூர் மழவராயரின் சிற்பம் 
  
பல்லவ வம்சத்தை சேர்ந்த வன்னியகுல க்ஷத்ரிய அரசர்களான முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மற்றும் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன்.
பல்லவ வம்சத்தை சேர்ந்த வன்னியகுல க்ஷத்ரிய அரசரும் உடையார் பாளையத்தின் கடைசி ஜமீன்தாருமான மஹா ராஜ ராஜ ஸ்ரீ கச்சி யுவரங்கப்ப காலாட்கள் தோழ உடையார்.   
                     

நானும்  கார்த்திக் நாயகரும் 
   
நானும் ஸ்ரீ விஜய் கண்டரும் 

சென்னை புத்தகக்காட்சி முடிந்த ஒரு சில நாட்களில் தர்ம ரக்ஷன சமிதி என்ற அமைப்பினர் சென்னை அரும்பாக்கத்தில் Hindu Spiritual Fair 
என்ற கண்காட்சியை நடத்தினர். 

அதன் ஒரு வரிசையில் வேளாளர், தெலுங்கு ரெட்டியார், நாடார், பள்ளர் என்று  பல சமூகங்களுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் நமக்கு வன்னியர் வரலாற்று ஆய்வு மையம் என்ற பெயரில் அரங்கு வழங்கப்பட்டிருந்தது. 

இந்த முறை 54 அங்குல அளவுள்ள தொலைக்காட்சியில் வன்னியர் வரலாற்று ஆவண படங்களை திரையிட்டோம்.      


Hindu Spiritual Fair - நான், முரளி நாயக்கர் மற்றும் கார்த்திக் நாயகர்   

 அரங்கின் உட்புறம் 
அரங்கில் வைக்கபட்டிருந்த பதாகைகள்  
பெரிய திரையில் ஆவணப்படம் 

கடந்த சூன் மாதம் வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக காட்சியிலும் பங்கேற்றோம். 

 சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற புத்தக காட்சி 
 அரங்கின் உட்புறம் 


பல்வேறு தரப்பினரும் நமது அரங்குகளை பார்வையிட்டு நம்முடன் கலந்துரையாடுகின்றனர். ஆனாலும் இம்சைகளுக்கும் குறைவில்லை. எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லாத சில இன குழுவினர் தங்கள் பொறாமையை வெளிபடுத்து கின்றனர். 

அவர்களுக்கெல்லாம் சொல்லி கொள்வது இது தான். அய்யா ! இருக்கிறவள் அள்ளி முடிக்க தான் செய்வாள். உங்களுக்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் தயவு செய்து கொசுக்கடி போல் தொல்லை செய்யாதீர்கள்.     




சோழர் குறுந்தகடு வெளியீடு




சோழர்களின் வாரிசுகளான பித்தர்புரம் எனப்படும் பிச்சாவரம் பாளையக்காரர்கள் பற்றி 2004  ஆம் ஆண்டு கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு இன்றும் வாழும் சோழமன்னர்கள் என்ற ஆவணப்படத்தை தயாரித்தேன். படம் எடுத்து ஏழு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் 04  -09  - 2011 அன்று வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வன்னியர் கல்வி திருவிழாவில் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் வெளியிட, சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு. கே. கோபால் அவர்கள் பெற்று கொண்டார்.

இதற்கு காரணமாக இருந்த திரு. கே. கோபால் அவர்கள், உடன் வந்திருந்த திரு. நா. முரளி நாயக்கர் அவர்கள், தியாகவல்லி திரு. சேகர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.            
  

விழாமேடையில் நான் 

எனது உரை 

குறுந்தகட்டை திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் வெளியிட திரு. கே. கோபால் அவர்கள் பெற்று கொள்ளுதல். 

இன்றும் வாழும் சோழமன்னர்கள் ஆவணப்படத்தை பார்க்க இங்கு அழுத்தவும்:   

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_22.html